Editorial / 2018 மே 25 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இராகலை மேற்பிரிவு, கிறசிலின் தோட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர், நேற்று வியாழக்கிழமை மாலை, ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டு, உயிரிழந்துள்ளாரென இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில், இராகலை கனிக்கா தமிழ் வித்தியாலயத்தில், தரம் நான்கில் கல்வி பயின்று வந்த சிவகுமார் சோபனா என்ற சிறுமியே (வயது 9) உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சிறுமி, பாடசாலை விட்டு வீடுத் திரும்பும்போதே, இவ்வாறு ஓடை நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.
சிறுமி ஓடை நீரில் அடித்துச்செல்லப்படுவதைக் கண்ட பிரதேச மக்கள், அவரை உடனடியாக மீட்டு, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல முற்பட்டபோதும், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டாரென தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச பரிசோதனைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago