Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி.ஷங்கீதன்
கோட்லோஜ் தோட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள 24 வீடுகள் தொடர்பாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை கிடைத்தவுடன் அமைச்சர் பழனி திகாம்பரம் இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று புதன்கிழமை (09) அங்கு கள விஜயத்தை மேற்கொண்டிருந்த மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்தார்.
கந்தப்பளை கோட்லோஜ் தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 24 வீடுகளை கொண்ட குடியிருப்புத் தொகுதி பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 10 வீடுகள் மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கின்றன. இவர்களில் 53 பேர் தற்காலிகமாக கந்தப்பளை, கோட்லோஜ் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு வசதிகளை பிரதேச செயலாளர் ஊடாக கிராம சேவகர் ஜே.இருதயராஜ் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்ததாவது,
தோட்ட முகாமையாளருடன் கலந்துரையாடியுள்ளேன். அவர் இது தொடர்பாக தமக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் அங்கு குடியிருக்க முடியாது என அவர்கள் தெரிவித்தால் காணிகளை பெற்றுத்தருவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.
மேலும், மேலும் இது தொடர்பாக அமைச்சர் பழனி திகாம்பரம் இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோரும் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிடுமாறு தனக்கு பணித்ததாகவும் அதன்படி அனர்த்தங்கள் ஏற்படும் பகுதிகளில் அமைக்கப்பட்டுவரும் வீடமைப்புத் திட்டத்தை இங்கும் அமுல்படுத்த ஏற்பாடுகள் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
14 Jul 2025