Kogilavani / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
15 வயது மகன் வீசிய கோடரி, தந்தையின் உயிரை பறித்த சம்பவமொன்று அக்குரஸ்ஸை, மில்லகஹதெனிய பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான சமரசிங்க தனபால (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் இவர் மதுபானத்துக்கு அடிமையானவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வழமைப்போன்று மேற்படி நபர் நேற்று மாலையும், மது அருந்திய நிலையில் தனது வீட்டுக்கு சென்றுள்ளதுடன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தகராரில் ஈடுபட்டுள்ளார். தந்தையின் நடத்தையில் கோபம் கொண்ட மேற்படி 15 வயது சிறுவன், அருகில் கிடந்த கோடரியை எடுத்து தந்தையை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவத்தில் படுகாமயடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 15 மற்றும் 13 வயது சிறுவர்கள் இருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago