Kogilavani / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரங்கல- நக்கிள்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள கோணவெல நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக சென்ற நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரங்கல வன்வாரி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரும் மேலும் மூன்று இளைஞர்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை, நக்கிள்ஸ் மலைத்தொடரிலுள்ள நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக சென்று காணாமல் போயுள்ளதாக தெரிவித்தனர்.
மேற்படி நால்வர் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .