2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்த இளைஞன்

Kogilavani   / 2017 மார்ச் 10 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை நகரிலுள்ள உணவகம் ஒன்றுக்கு, உணவு உண்ணச் சென்ற இளைஞரொருவர், திடீரென மயங்கி, கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்த பரிதாபச் சம்பவமொன்று, இன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன், பலத்த சூட்டுக்காயங்களுடன், பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதுளை, தெல்பெத்த பெருந்தோட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞனே, இவ்விபரீதச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

மேற்படி இளைஞன், வடை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எண்ணெய் சட்டிக்குள் விழுந்துள்ளதாக தெரியவருகிறது. இவரது நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .