2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

குதிரையிலிருந்து கீழே விழுந்த பிரிகேடியர்

Kogilavani   / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா                                   

குதிரைச் சவாரி பயிற்சியை மேற்கொண்டிருந்த  பிரிகேடியர் ஒருவர், குதிரையிலிருந்து கீழே விழுந்து மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டச் சம்பவம், பதுளையில் இடம்பெற்றுள்ளது.

தியத்தலாவை இராணுவ முகாமைச் சேர்ந்த பிரிகேடியர் எஸ்.ஏ.சேனாரட்ன (வயது 39) என்பவரே, இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இவர், பதுளையிலிருந்து விமானப்படையின் ஹெலிகொப்டரின் மூலம், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பிரிகேடியர், தியத்தலாவை ' பொலோ' மைதானத்தில் குதிரை சவாரியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது, குறித்தக் குதிரை கட்டுப்பாட்டை மீறி  தியத்தலாவை நகரை நோக்கி வேகமாக ஓடியுள்ளது. இதன்போதே, பிரிகேடியர் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.

ஏனைய இராணுவ வீரர்கள், மிகுந்த பிரயத்தனத்தின் மத்தியில் குதிரையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த இராணுவ வீரர், உடனடியாக பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவரது நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .