Sudharshini / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சன குமார ஆரியதாச
தம்புளை, திகாம்பத காட்டுப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை, காட்டு யானைகள் உட்கொள்வதால் யானைகளுக்கு உயிராபத்து ஏற்படுகின்றது என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேற்படி காட்டுப்பகுதியில் கொட்டப்படும் பொலித்தீன் மற்றும் கண்ணாடித் துண்டுகள்; போன்றவற்றை யானைகள் உட்கொள்வதால் காயங்கள் ஏற்படுவதோடு உயிராபத்தும் ஏற்படுகின்றன.
இப்பகுதயில் சுமார் 50 தொடக்கம் 60 யானைகள் இருந்தன. ஆனால், தற்போது 10 தொடக்கம் 15 வரையான யானைகள் மாத்திரமே காணப்படுகின்றன.
இதனால் , இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. எனவே, இக்காட்டுப் பகுதியில் குப்பைகளை கொட்டும் நடவடிக்கையானது தடுக்கப்பட வேண்டும். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத் தருமாறு அவ்வதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago