2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

குப்பைப் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு

Kogilavani   / 2017 மார்ச் 24 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்   

ஹட்டன் நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, கொட்டகலை பிரதேச சபை வாளாகத்தில், தற்காலிகமாக கொட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண இந்துக் கலாசார, விவசாயத் தோட்ட, உட்கட்டமைப்பு அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

ஹட்டன் குடா ஓயா பிரதேசத்தில்,  குப்பைகளை கொட்டுவதற்கு, பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததனால், அங்கு குப்பைகள் கொட்டப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், ஹட்டன்-டிக்கோயா நகரசபைக்குள் குப்பைகள் சேகரிப்பதும் குறைவடைந்துள்ளது.

இதன்காரணமாக, ஹட்டன்-டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட மக்கள், பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்விடயத்துக்குத் தீர்வுக் காணும் நோக்கில்,  மத்திய மாகாண அமைச்சர்

 எம்.ராமேஸ்வரன்,  நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கமைவாக,  மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் பல அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இக்கலந்துரையாடலின்போது, குடாஓயாவில் கொட்டப்படும் குப்பைகளை, கொட்டகலை பிரதேச சபை வளாகத்தில் தற்காலிகமாகக் கொட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். இப்பிரச்சினைக்கான  நிரந்தர தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X