2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கொம்போஸ் உரம் தயாரிக்க நடவடிக்கை

Kogilavani   / 2016 ஜூலை 04 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள வீடுகளில் ஒதுக்கப்படும் கழிவுப் பொருட்களை சேகரித்து அதன்மூலம், கொம்போஸ் உரம் தயாரிக்கும் வேலைத்திட்டத்தை சப்ரகமுவ மாகாண சபை ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்துக்கமைவாக சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 100 இலட்சம் ரூபாய் செலவில் கேகாலை மாவட்டத்தில் உள்ள 2,000 வீடுகளுக்கு கழிவுப்பொருட்களை சேகரிப்பதற்கான உபகரணங்கள்  நேற்று(03) வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண சபையின் உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளர் டி.டபிள்யு.எஸ்.ராஜபக்ஷ, முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர காமன் பதிரன ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .