2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கூரைத்தகடுகள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2016 ஜூலை 30 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், மு.இராமச்சந்திரன்

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 15 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்  28 தோட்டங்களைச் சேர்ந்த 472 தொழிலாளர் குடும்பங்களுக்குக் கூரைத்தகடுகள், இன்று சனிக்கிழமை (30),  மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

10,039 கூரைத் தகடுகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோறன்ஸ், மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி மற்றும் தோட்ட அதிகாரிகள், தோட்ட தொழிலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .