Sudharshini / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மலையகத்தில் பெரும்பாலான பகுதிகளில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விவாசாயத்தில் ஈடுபடுவோர், பெரும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள், மரக்கறிகளை அழிப்பதுடன் மரக்கிளைகளை உடைத்து தோட்டங்களுக்குள் போடுவதால் மிஞ்சியிருக்கும் மரக்கறிகளும் சேதமடைகின்றன.
குரங்குகளின் அட்டகாசத்திலிருந்து தமது பயிர்களை பாதுகாத்துக்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
'குப்பைகளை முறையற்ற விதத்தில் கொட்டுவதனாலேயே குரங்குகள் கிராமங்களுக்குள் வருகின்றன. இதனை, கட்டுப்படுத்துவதற்கு தற்காலிக தீர்வாக உடவலவ, வில்பத்துவ போன்ற காட்டுப் பகுதிகளுக்கு குரங்குகளை கொண்டு விடுவது சிறந்தது' என சுகாதார அமைச்சின் சப்ரகமுவ மாகாண பணிப்பாளர்
டபிள்யூ.எச்.ரணசிங்க தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago