Sudharshini / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி. பெருமாள்
நல்லத்தண்ணி மற்றும் திம்புள்ள பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறே தோட்ட வலதல பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்காகி விவேகானந்தன் விக்னேஸ்வரன் (வயது 31) என்பவர் சனிக்கிழமை (03) உயிரிழந்துள்ளார்.
மாட்டுக்கு புல் அறுக்கச் சென்றிருந்த போதே இவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார். இந்நிலையில், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக கொண்டுச் சென்ற போது, அவர் வழியிலே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, திம்புள்ள- பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திம்புள்ள, பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் நால்வர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திம்புள்ள, பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (03) விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளும் இரண்டு சிறுவர்களுமே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.
திம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர
41 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
45 minute ago
2 hours ago