2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

கோழி இறைச்சி கடையில் திருடியவர் கைது

Sudharshini   / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அக்குறணை நகரிலுள்ள கோழி இறைச்சிக் கடையிலிருந்து ஐம்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியான கோழிகளையும் 25,000 ரூபாய் பெறுமதியான நீர்பாய்ச்சும் இயந்திரத்தையும் திருடிய குற்றச்சாட்டில், கண்டி மடவளையைச் சேர்ந்த இளைஞனை(வயது 24) அலவத்துகொடை பொலிஸார் திங்கட்கிழமை(22) மாலை கைதுசெய்துள்ளனர்.  

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரண்டு தினங்களுக்கு முன்னர், அக்குறணை நகருக்கு கோழி இறைச்சி கொள்வனவுக்காக வந்த இவ்விளைஞன், கடையை நன்கு நோட்டமிட்டதை தான் அவதானித்ததாகவும் அன்றைய தினம் இரவே கோழிகள் மற்றும் நீர்ப்பாய்ச்சும் இயந்திரம் என்பன திருடப்பட்டதாகவும் கடையின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார், திங்கட்கிழமை மாலை இவ்விளைஞனை கைதுசெய்தனர்.

திருடிய கோழிகளை கொன்று, அவற்றின் கழிவுகளை மஹாவலி ஆற்றில் போட்டதாகவும்  கோழி இறைச்சிகளை மடவளை பிரதேசத்திலுள்ள கடைக்கு விற்பனை செய்ததாகவும் அவ்விளைஞன் விசாரணைகளின்போது
பொலிஸாருக்கு தெரிவித்துள்ளான். விசாரணையின் பின்னர் 70 கிலோ இறைச்சியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .