Freelancer / 2022 பெப்ரவரி 12 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
பதுளை - லுணுகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் பழைய ஸ்டோர் தோட்டப்பகுதியில் இயங்கிவந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், இவர் பதுக்கி வைத்திருந்த 705 லீட்டர் கோடாவும் (940 - போத்தல்) கைப்பற்றப்பட்டு, லுணுகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல அவர்களின் பணிப்பின் கீழ், பதுளை மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பொ.ப. அபேபால அவர்களின் வழிநடத்தலின் கீழ் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

19 minute ago
28 minute ago
34 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
34 minute ago
40 minute ago