2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாணத்தை சேர்ந்த அரசியல்வாதியொருவரின் செயலாளர் என தன்னை அடையாளப்படுத்திகொண்ட நபரொருவரை, 65 கிராம் 600 மில்லிகிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.

பஹத்ததும்பறை, பேராதனை ஆகிய பகுதிகளில் வசித்து வருபவரென கூறப்படும் 33 வயதுடைய நபரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், கண்டி- குருநாகல் வீதி, ஹேதெனியவில் வைத்து, மோட்டார் சைக்களில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மத்திய மாகாணத்தில் பிரபல அரசியல்வாதி ஒருவரது செயலாளராக தான் கடமையாற்றி வருவதாக பொலிஸ் விசாரணைகளின் போது அவர் தெரிவித்துள்ளார் என பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .