Gavitha / 2016 ஜூலை 02 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் கட்டுத் துப்பாக்கியொன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நபரொருவர் நோட்டன் பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரசிய தகவலையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் கற்குகைப் பகுதியில் இந்தத் துப்பாக்கியை தான் கண்டெடுத்ததாகவும் தனக்கு துப்பாக்கியை பிரயோகிப்பது எப்படியொன்று தெரியாது என்றும் கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .