Kogilavani / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ
சப்ரகமுவ மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த சிறுவர்களால் தயாரிக்கப்பட்ட கைத்தொழில் பொருட்களின் விற்பனை கண்காட்சி நேற்று(7) மாகாண சபையின் கட்டத்தொகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சப்ரகமுவ மாகாண சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி, சிறுவர் பராமரிப்பு அமைச்சின் கீழ் இயங்கும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் இக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டது.
சப்ரகமுவ மாகாணத்தில் 15 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் உள்ளன. அதில் 500 சிறுவர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சிறுவர்களின் கைவண்ணத்தில் உருவாக கைத்தொழில் பொருட்களே காட்சிக்கு வைக்கப்பட்டன.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, கண்காட்சியை ஆரம்பித்து வைத்ததுடன் அச்சிறுவர்களை ஊக்குவிக்குமுகமாக அவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்.


42 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
57 minute ago
2 hours ago