2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கண்டியில் செயலமர்வு

Niroshini   / 2016 ஜூலை 24 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால வளர்ச்சிக்காகவும் கட்சியின் முன்னேற்றப் பயணத்தை தொடர்வதற்காக எதிர்கால இளைஞர்களுக்கு கட்சியின் முக்கியத்தை எடுத்துச்செல்வதற்காகவும்   நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுக்கு வீடு மரம் என்ற செயற்திட்டத்தை பற்றி விளக்கமளிக்கும்  செயலாமர்வு இன்று 24ஆம் திகதி கட்சியின் தலைவரும் நீர் வழங்கள் மற்றும் நகர அபிவிருத்தித் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கண்டியில் இடம்பெற்றது.

கண்டி கட்டுகஸ்தோட்டையில் அமைந்துள்ள கண்டி மாவட்ட நீர் விநியோகத் திட்டக்கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வீட்டுக்கு வீடு மரம் என்ற நடமாடும் சேவை நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, நடமாடும் சேவை நாடு முழுவதிலும் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதைப் பற்றி அமைச்சர் ஹக்கீம், விளக்கமளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .