J.A. George / 2021 ஜனவரி 29 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
ஹட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ - மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
28 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான மாலிகா பிரியதர்ஷினி என்பவரே, அவரின் கணவரால் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணுக்கு மற்றுமொரு நபருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படும் நிலையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 26 ஆம் திகதி மாலை இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மறுநாள் 27 ஆம் திகதி மாலை குறித்த பெண்ணின் கணவர் கினிகத்தேனை பொலிஸில் சரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், ஸ்தல விசாரணையை மேற்கொண்டனர். நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
20 minute ago
31 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
44 minute ago