2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

கதண்டு கொட்டியதில் ஒருவர் மரணம்

Editorial   / 2025 ஒக்டோபர் 26 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேம்பியன் லின்ஃபோர்ட் தோட்டத்தில் ஞாயிறுக்கிழமை (26) மதியம் புல் வெட்டச் சென்ற தோட்டத் தொழிலாளி ஒருவர்  கதண்டு குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதே தோட்டத்தைச் சேர்ந்த கருப்பன் குண்டு   (வயது 69) என்பவதே உயிரிழந்துள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

தனது கால்நடைகளுக்கு புல் வெட்டிக் கொண்டிருந்தபோது, ​​அதே பகுதியில் உள்ள ஒரு பெரிய மரத்தில் கட்டப்பட்டிருந்த கதண்டு குளவி கூண்டை பறவை தாக்கியதால் கிளர்ந்தெழுந்த குளவிகள் அவரைத் தாக்கின.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .