Janu / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொத்மலை, கெரடி எல்ல பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலத்த காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் காயமடைந்த ஒருவரை பார்ப்பதற்காக சென்றுவிட்டு, மீண்டும் கொத்மலை தவலந்தென்ன பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, நுவரெலியா - கம்பளை வீதியின் கெரடி எல்ல பகுதியில் புதன்கிழமை (02) அதிகாலை இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த வேன் வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கெரடி எல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கும், இலங்கை போக்குவரத்து சபை (CTB) பஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கும் அருகிலேயே இந்த வேன் விபத்தும் இடம்பெற்றுள்ளது என கொத்மலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வேன் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
சுதத் எச். எம். ஹேவா

14 minute ago
23 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
34 minute ago