Janu / 2025 நவம்பர் 06 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுருகெட்டிய சந்திக்கு அருகில் வசிக்கும் இளைஞன் ஒருவன் புதன்கிழமை (05) மாலை 5.00 மணியளவில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்துள்ளார்.
மேற் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஆர்.எம். ஹஷான் இந்திக பண்டார என்ற இளைஞனே இவ்வாறு தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பு தனது தாய் மற்றும் தந்தைக்கு எழுதிய கடிதமொன்று மீட்கப்பட்டுள்ளதுடன் அவரது பணப்பையில் காதலியின் புகைப்படமும் காணப்பட்டுள்ளது.
காதலி பல நாட்களாக தொலைபேசியில் பேசாததால் மனமுடைந்த இளைஞன் இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
போயா தனமான புதன்கிழமை (05) அன்று குறித்த இளைஞனின் தாய் விகாரைக்கு சில் அனுஷ்டானம் செய்வதற்காக சென்றிருந்ததுடன் பாட்டன் அருகிலுள்ள கடைக்குச் சென்று திரும்பி வந்தபோது அவர் இறந்து கிடந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமனசிறி குணதிலக
22 minute ago
52 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
52 minute ago
54 minute ago
2 hours ago