2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள்; மாணவிகள் எண்மர் வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

 

மஸ்கெலிய, காட்டுமஸ்கெலியா தோட்டம் லெங்கா பிரிவில், இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவிகளை வழியில் இடைமறித்த இனந்தெரியாத இருவர், கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதால், அம்மாணவிகள் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளனரெனவும் பிரதேச மக்களின் உதவியுடன் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் எட்டு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

கறுப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருந்த இருவரே, இவ்வாறு மாணவிகளை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

இவர்களில் இரு மாணவிகள் இன்னும் மயக்கநிலையிலிருந்து மீளவில்லை என்றும் இவர்களை தொடர்ந்தும் சிகிச்சைக்கு உட்படுத்தி வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .