Kogilavani / 2016 ஜூலை 01 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷெல்ட்டன் ஹெட்டியாராய்ச்சி
கந்தப்பளை, எஸ்கடேல் தோட்டத்தைச் சேர்ந்த கருப்பையா வனராஜா என்ற 45 வயது நபரின் தலையில் தாக்குதல் மேற்கொண்டு அவரை கத்தியால் குத்தியதுடன், அவரை லொறியில் ஏற்றிக் கொலைசெய்த குற்றச்சாட்டில் கைதான மூவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கந்தப்பளைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஹெட்டித்தரிகே காமினி விஜேசூரிய, சமரகே சஞ்சீவ மஹிந்த பண்டார, அதுலகே நலீன் யூசுப் ஆகியோருக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலைச்செய்யப்பட்ட நபர் உள்ளடங்களாக மேற்படி நால்வரும் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திகதி திருட்டுச் சம்பவமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, மரணமடைந்தவருக்கும் மேற்படி மூவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலே இக்கொலைக்கு காரணமென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை, நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க வழங்கினார்.
8 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago