2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கருப்புசாமி ஆலய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

R.Maheshwary   / 2022 ஜூலை 25 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஆ.ரமேஸ்

கோட்லோஜ் தோட்டம் 4ஆம் இலக்க தேயிலை மலையில் அமைந்துள்ள கருப்புசாமி ஆலயம்,மற்றும் அதை சுற்றியுள்ள இடம் ஆக்கிரமிப்பு சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நுவரெலியா நீதவான் நீதிமன்றில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 2019ஆம் ஆண்டு நுவரெலியா நீதவான் நீதிமன்ற மன்றில் தொடரப்பட்டிருந்த குறித்த வழக்கு,    கடந்த மூன்று வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் , தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதன்போது வழக்கு தொடுக்கப்பட்டிருந்த கோட்லோஜ் தோட்டத்தை சேர்ந்த பத்து பேரின் சார்பில்  சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜன் ஆஜராகி வாதாடினார்.

இவரின் வாதாட்டத்தின் பின் வழக்கு தொடர்பில் மூன்று வருடங்களுக்கு பின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இத் தேயிலை மலையில் 200 வருடங்களாக கோட்லோஜ் தோட்ட மூதாதையர்கள் காவல் தெய்வமாகவும்,மலை கோயிலாகவும் அங்கு  முனி தெய்வத்தையும்,கருப்பு சாமியையும் கல்லாக வைத்து  வணங்கி வந்தனர்.

இத்தோட்டத்திற்கு அருகில் உள்ள கல்பாலம் எனும் கிராம மக்கள் முனி கோயில் மற்றும் கருப்பு சாமி ஆலய இடத்தை ஆக்கிரமித்து அங்கு காணப்பட்ட மரத்தில் பௌத்த கொடியை பறக்கவிட்டிருந்தனர்.

இந்த சம்பவம் 17.07.2019ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதன்போது   சம்பவம் தொடர்பில் அறிந்த கோட்லோஜ் தோட்ட மக்கள் அங்கு சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த இடத்தை மீட்டு பறக்கவிடப்பட்டிருந்த பௌத்த கொடியையும் அகற்றியிருந்தனர். 

இது தொடர்பாக   கல்பாலம் கிராம பௌத்த விகாரை மதகுரு ஒருவர்  கோட்லோஜ் மக்கள் மீது கந்தப்பளை பொலிஸில் முறையிட்டிருந்தார்.

முறைப்பாட்டை ஏற்று நடவடிக்கை எடுத்த பொலிசாரின் கடமைக்கு  இடையூறு வழங்கியதாகவும்,சட்டத்தை மீறியதாகவும் தோட்ட மக்கள் பத்து பேரை கைது செய்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கற்களை வைத்து தெய்வமாக வணங்கி வந்த இடத்தில் ஆலயம் அமைத்து உடனடியாக அங்கு கருப்பு சாமி சிலைகளை இ.தொ.கா தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் வழங்கி வைத்து விசேட பூஜையுடன் சிலைகளும் பிரதிஷ்டை படுத்தப்பட்டது.

இருப்பினும் சம்பவம் தொடர்பில்  கைது செய்யப்பட்ட பத்து பேருக்கு எதிராக கந்தப்பளை பொலிசாரால் வழக்கு தொடரப்பட்டிருந்த வழக்கு மூன்று வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் பத்து பேரையும் விடுதலை செய்த நீதவான் வழக்கையும் தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .