2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

கலாபொக்க மக்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமக்குரிய கொடுப்பனவுகளை உரிய நேரத்தில் வழங்குமாறு கோரி, கலாபொக்க அரச பெருந்தோட்ட யாக்கத்துக்கு சொந்தமான ஒன்பது தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று(23), டீமலை பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 10ஆம் திகதி வழங்கப்பட வேண்டிய மாதாந்த சம்பளம் 16 ஆம்  திகதியே வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வழங்கப்படாத தீபாவளி முற்பணமும் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, தமக்கான கொடுப்பனவுகளை உரிய நேரத்தில் வழங்காது விடுத்த தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்படி மக்கள்  கடந்த 16ஆம் திகதி முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதுடன் நேற்று(23) ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

கலாபொக்க, கலகிரிய, மேமலை, சோலங்கந்த, நடுக்கணக்கு, காச்சமலைக்கு உட்பட்ட ஒன்பது தோட்டங்களை சேர்ந்த மக்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கு உரிய நேரத்தில் கொடுப்பனவுகளை வழங்காததால் தாம் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ளதாகவும் கொதிநீரை குடித்து தமது வயிற்றுப்பசியை போக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகள் குறித்து தொழிற்சங்கங்க பிரதிநிதிகளுக்கு தெரிவித்தபோதும் அவர்கள் யாரைக் கேட்டு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டீர்கள் என பதில் கேள்வி எழுப்புவதாகவும் தொழில் அமைச்சர் நியமிக்கப்படவில்லை, செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை நியமிக்கப்பட்டதும் இது குறித்து பேசலாமென அசமந்தபோக்கை கடைப்பிடிப்பதாகவும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .