Kogilavani / 2016 ஜூலை 28 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 4,700 மில்லியன் ரூபாயை இம் மாகாணத்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் கற்றல் நடவடிக்கைகள் குறித்து பாடசாலை அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு, இரத்தினபுரியில் அமைந்துள்ள மாகாண மத்திய நூலகத்தின் கேட்போர் கூடத்தில், புதன்கிழமை (27) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரைத்த அவர், 'மாகாண பாடசாலைகளின் அபிவிருத்திக்காக இவ்வருடம் கூடுதலான நிதி மாகாணத்துக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் மேற்படி மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் பௌதிகவள பற்றாக்குறையை 99 வீதம் நிவர்த்திக்க முடியும்' என்றார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago