2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கலந்துரையாடல்

Sudharshini   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய உள்ளூராட்சி நிறுவனங்களின் சட்டங்களை திருத்தம் செய்வதற்கும், அது குறித்த பிரேரணைகளை சமர்ப்பிப்பதற்குமான முன்னோடி கலந்துரையாடல் ஒன்று  நாளை (21) காலை 10.00 மணிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சௌமிய பவனில் இ.தொ.கா நிர்வாக உப-தலைவரும் சட்டதரணியுமான கா.மாரிமுத்து தலைமையில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இயங்கும் உள்ளூராட்சி சபைகளின் நிறைவேற்று கடமைகள், தொடர வேண்டிய பணிகள் மற்றும் மக்களின் மேம்பாடுகளுக்கு உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து இ.தொ.கா விரிவாக ஆராய்ந்து, அதற்குப் பின்னர் ஒட்டு மொத்தமான பிரேரணைகளை உள்ளுராட்சி அமைச்சிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்; என தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் மாகாணசபை, மாநகர சபை ஆகியவற்றின் அங்கத்தவர்கள்  உட்பட  முன்னாள் நகரசபை, பிரதேசசபை தலைவர்களும் உப-தலைவர்களும் அங்கத்தவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர் என இ.தொ.கா.வின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .