2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

கள்ளக்காதலனுக்காய் பிள்ளைகளை அவதூறாக பேசிய தாய்க்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கள்ளக்காதலனை காப்பாற்றுவதற்காக தனது இரண்டு பிள்ளைகள் குறித்து அவதூறான கருத்துக்களை கூறிய பெண்ணை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ருவான்வெல்ல நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன்னர், ருவான்வெல்ல, தம்பகல்வத்த மஹல்ல பிரதேசத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் இரு சிறுவர்களை பொலிஸார் மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் நபரொருவரையும் கைதுசெய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் மேற்படி குழந்தைகளின் தாயினது கள்ளக்காதலன் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேற்படி, நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இந்நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இதன்போது, சிறுவர்களின் தாயையும் நீதவான் விசாரணைக்கு உட்படுத்தியபோது அப்பெண் தனது கள்ளக்காதலனை காப்பாற்றும் நோக்கில்தான் தனது பிள்ளைகள் குறித்தே அவதூறான கருத்துக்களை கூறியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்தே, அப்பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, பல்வேறு துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை, குறுவிட்ட பரடைஸ் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .