எம். செல்வராஜா / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீமொந்து, இரும்புக்கம்பிகள், கட்டட நிர்மாணிப்புக்காக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த, சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹப்புத்தளையின் பெருந்தோட்டமொன்றின் அபிவிருத்தி வேலைத்திடத்துக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களே, இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, ஹப்புத்தளை பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, களவாடப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள், இன்று (12) மீட்கப்பட்டது.
பொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே, இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்புடைய விசாரணைகளை, ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
31 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
47 minute ago
2 hours ago