Kogilavani / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஷ்
கழிவுப்பொருட்களை கொண்டு விவசாயிகளுக்கு தேவையான பசளைகளை தயாரிக்கும் செயற்றிட்டத்தில் தலவாக்கலை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் பிரிவு ஈடுப்படவுள்ளதாக அதன் தலைமை அதிகாரி டீ.எம்.பிடிகல தெரிவித்தார்.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பசளையை ரூபாய் 10 முதல் 15இற்கு விற்பனை செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
'தலவாக்கலை நகர் மற்றும் கிராம தோட்டப்பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கிப்போகும் கழிவுகளை கொண்டு சேதன பசளைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனவே, வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வியாபார நிலையங்களில் ஒதுக்கப்படும் கழிவுகளில் பொலித்தீன், காட்போட், பிளாஸ்டிக், பத்திரிகை மற்றும் கண்ணாடி போன்ற பொருட்களை வேறுபடுத்துமாறு பொதுமக்களை கோருகிறோம்.
நகரசபை ஊழியர்கள், உக்காத கழிவுப் பொருட்களை, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வந்த பெற்றுகொள்வார். உக்கும் கழிவுகளை தினமும் சேகரிப்பர்.
இச்சேதனை பசளைகளை விற்பனை செய்வதனூடாக கிடைக்கும் நிதியானது நகரசபையின் பொது அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு பயன்படுத்தப்படும்' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .