Kogilavani / 2021 மே 04 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன் பொது பஸ்தரிப்பிடத்துக்கு அருகில் காணப்படும் மஹிந்த ராஜபக்ஷ மாவத்தைக்குச் செல்லும் வீதி, மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், அவ்வீதி வழியாகப் போக்குவரத்துச் செய்வதில் பாரிய இடர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வீதியைப் புனரமைப்பதில் ஹட்டன்-டிக்கோயா நகரசபை பாராமுகமாகச் செயற்படுவதாக, பிரதேச மக்கள் குற்றஞச்சாட்டியுள்ளனர்.
பாதையின் குறிப்பிட்டதொரு பகுதி, தனிநபரொருவர் அமைத்துள்ள மதில் காரணமாக ஏனைய பகுதிகளைவிட சற்று ஒடுங்கியதாகவே காணப்படுவதாகவும் மறுபுறுத்தில் பாரிய பள்ளமொன்றுக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள பிரதேச மக்கள், இந்தப் பள்ளத்தில் மூன்று ஓட்டோக்கள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இரவு வேளையில் இவ்வீதி வழியாகப் பயணிப்பதற்கு ஓட்டோ சாரதகள் வருவதில்லை என்றும் அவசர நிலைமைகளின்போது பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வீதியைப் புனரமைத்துத் தருமாறு, கிராம மக்கள் இணைந்தும் தனிப்பட்ட ரீதியாகவும் பலமுறை ஹட்டன் நகர சபைக்கு நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் அறிவித்திருந்த போதிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாரிய ஆபத்துகள் இடம்பெறுவதற்கு முன்னர் இவ்வீதியைப் புனரமைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

14 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago