Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 12 , பி.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவிவருவதுடன் அதிகாலை வேளையில் அதிகளவில் குளிரான காலநிலையே நிலவுகின்றது.
இக்காலத்தில் சமூக விரோதிகள் பற்றைகளுக்கு தீ வைக்க ஆரம்பித்து விட்டனர்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிராப்பு தோட்ட பகுதியில் உள்ள மவுஸ்சாகலை நீர்த்தேக்க சுற்றியுள்ள பற்றைகளுக்கு தீ வைத்து உள்ளனர். இதனால் சுமார் 10 ஏக்கர்
காடுகள் கருகியுள்ளன.
வன ஜீவராசிகள் தீயில் அழிந்து போய் உள்ளன. குறிப்பாக குருவிகள், மான் குட்டிகள், முயல், பன்றி போன்ற பல உயிரினங்கள் அழிந்து போய் உள்ளன.
இது குறித்து வன பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், மாலை 6 மணிக்கு மேல் தீ வைப்பதால் தீயை அணைக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் காட்டு மிருகங்கள், பறவைகள் அழிவதுடன் தோட்ட குடியிருப்பு பகுதிக்குள்ளும் மிருகங்கள் நுழைய வாய்ப்பு உள்ளது என்றார்.
வன பகுதிக்கு தீ வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தீ வைப்பவர்களை அடையாளம் காண்பதற்கு, அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உதவிச் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
4 hours ago