Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 31 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ், எஸ்.சுஜிதா
“தமக்கு உரிய காணியை உடனடியாக வழங்காவிட்டால், போராட்டத்தை கைவிட போவதில்லை” என, நுவரெலியா - லிந்துலை - வோல்ட்றீம் தோட்டத்தின் கவிலினா பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து, வோல்ட்றீம் தோட்டத்தின் கவிலினா பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள், இன்று (31) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம், தோட்ட காரியாலயத்திற்கு முன்னால் காலை 8 மணி முதல் 9.30 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 100இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியதாவது,
“இப்பகுதியில், கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி வீசிய மினிசூறாவளியால், 45ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியதுடன், பாரிய மரங்களும் அப்பகுதியில் முறிந்து விழுந்தன. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன.
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு 48 வீடுகளை அமைப்பதற்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், தோட்ட நிர்வாகம் காணியை வழங்குவதில் மறுப்பு தெரிவித்து வருகின்றது.
“காணியை தருமாறு, தோட்ட பொதுமக்கள் பல தடவை தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கையை முன்வைத்த போதிலும், தோட்ட அதிகாரியால் உரிய பதில் வழங்கவில்லை. இந்நிலையிலேயே இதனைக் கண்டித்து, இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்” என்றனர்.
இதேவேளை, இது தொடர்பில், உரிய அதிகாரிகளிடம் தொழிலாளர்கள் பதில் கேட்க முயற்சித்த போதும், தோட்ட காரியாலயம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .