2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

காதலனுக்கு தொலைபேசியை பரிசளித்த பெண் கைது

Janu   / 2025 ஜனவரி 02 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைத்தொலைபேசியொன்றை களவாடி தனது காதலனுக்கு பரிசாக வழங்கிய பெண் ஒருவர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா நீதிமன்ற களஞ்சியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க தொலைபேசி ஒன்று காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட  முறைப்பாட்டிற்கு அமைய தொலைபேசி தரவுகளை சோதனையிட்ட பொலிஸாரால் காணாமல் போன தொலைபேசியை பயன்படுத்திக் கொண்டிருக்கும் நபரை கண்டுபிடித்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது நீதிமன்ற களஞ்சியசாலையில் பணிபுரிந்த அவருடைய காதலி அதனை பரிசாக வழங்கியமை தெரியவந்துள்ளது.

அதற்கமைய சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டு திங்கட்கிழமை (30) அன்று  நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை  2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

செ.தி பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .