Editorial / 2020 ஜூலை 27 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அருள்ஷான்
கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹூபிட்டிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட களுப்பான தோட்டத்தில், 2016ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவில், 16 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த அப்போதைய மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதியளித்திருந்தார்.
களுபான தோட்டமானது, மலையுச்சியில் காணப்படுவதால், முழு தோட்டமே மண்சரிவு அனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருந்தமையால், முழு தோட்ட மக்களுக்கும் 100 வீடுகள் கட்டித் தருவதாக, அவர் உறுதியளித்திருந்தார்.
ஆனால், மண்சரிவு இடம்பெற்று அமைச்சரின் பதவி காலம் நிறைவடையும் வரை, அந்தத் தோட்டத்துக்கு 100 வீடுகள் என்பது வெறு கனவாகவே இருந்து வருகின்றது.
மனித வள அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து, 76 வீடுகள் அமைச்சர் திகாம்பரத்தால் மக்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்டாலும், குறித்த 76 வீடுகளில், ஒன்று கூட பூரணப்படுத்தப்படாத நிலையில் காணப்படும் அதேவேளை, மக்களே அந்த வீடுகளை பலவந்தமாக உடைத்து குடிபுகும் நிலையே தற்போது காணப்படுகின்றது.
இந்த மாதம் 20ஆம் திகதி, நாடு முழுவதும் கடும் மழையுடனான வானிலை நிலவியபோது, இந்த முழுமையற்ற வீடுகளில் வசித்த மக்கள், பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர் என, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், விஜயகாந்த் என்பவர் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.
இதேவேளை கேகாலை மாவட்டத்தில் உள்ள தோட்டங்களுக்கு வீடுகளை அமைக்கும் பணிகளுக்கான பொறுப்பை, முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தின் செயலாளர் எனத் தெரிவித்துக்கொள்ளும் பழனி விஜயகுமார் என்பவர் செயற்பட்டதாகவும் இதுதொடர்பான விடயங்களுக்கு பழனி விஜயகுமாரின் கையொப்பத்துடனான கடிதங்க,ள் பாதிக்கப்பட்ட தோட்ட நிர்வாகத்தினருக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
23 minute ago
31 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
31 minute ago
57 minute ago