மொஹொமட் ஆஸிக் / 2019 நவம்பர் 28 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தின் பூஜாப்பிட்டி, அக்குறணை, பாத்ததும்பறை ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் வளர்க்கப்படும் கால் நடைகளுக்கு, கால்வாய் நோய் பரவி வருவதாகவும் எனவே, கால்நடை வளர்ப்பாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படணே்டும் என, மத்திய மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.பீ.கே ராஜநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று (27) கருத்துத் தெரிவித்த அவர்,
மாடுகளுக்கு இடையிலேயே இந்த நோய் பரவி வருவதாகவும் எனவே, மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள், அவானமாக செயற்படுமாறும் அவர் கோரினார்.
மாடுகள் மந்த கதியில் இருப்பது, புல் மேயாமல் இருப்பது, கால்கள், வாயில் புண்கள் ஏற்படுதல், வாயில் நுரை வடிதல் போன்றவையே, இந்நோய்க்கான அறிகுறி என்றும் அவர் கூறினார்.
எனவே, இவ்வாறான அறிகுறிகளை, கால்நடைகளுக்கு மத்தியில் அவதானித்தால், அவற்றை உடனடியாக கால்நடை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago