Janu / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் காரணமாக கொட்டகலைக்கும் அம்பேவெல பகுதிக்கும் இடையிலான புகையிரத வீதி ஆங்காங்கே பாரியளவில் சேதமடைந்துள்ளது.
வட்டகொடையிலிருந்து அம்பேவெல வரையில் பாரிய மண் மேடுகள் சரிந்து காணப்படுகின்றதுடன் மேலும் கிறேட் வெஸ்டன் மலை உச்சியில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டு அதிலிருந்து ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக கிறேட்வெஸ்டனிலிருந்து ரதெல்ல வரையான புகையிரத வீதி பாரியளவில் சேதமடைந்து, புகையிரத வீதி தாழிறங்கி உள்ளதுடன் மண்மேடுகளும் பாறைகளும் சரிந்து புகையிரத வீதியில் கிடக்கின்றன.
இப்புகையிரத வீதிகள் புனரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புவதற்கு காலதாமதம் ஏற்படும் எனவும் கொட்டகலையிலிருந்து அம்பேவெல பகுதிக்கு இடையிலான புகையிரதங்களை இயக்குவது மிகவும் கடினம் எனவும் புகையிரத வீதி பராமரிப்பு பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் கொட்டகலையிலிருந்து அம்பேவெல வரையிலான புகையிரத வீதி மீட்டெடுப்பது மிகவும் கடினம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பி.கேதீஸ்


29 minute ago
45 minute ago
54 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago
54 minute ago
58 minute ago