Editorial / 2019 ஜூன் 07 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தில் காணப்பட்ட கிராம சேவகர் காரியாலயம், சமீபத்தில் குடா மஸ்கெலியா பகுதிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், குறித்த காரியாலயம், மீண்டும் கிளன்டில் தோட்டத்திலேயே அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ்குமாராலேயே, இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சில மாதங்களுக்கு முன்னர், குறித்த காரியாலயம், பிரதேசச் செயலகத்தால், குடா மஸ்கெலியா பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தது. இதனால், தோட்ட மக்கள், அசளகரியத்துக்கு முகங்கொடுத்து வந்தனர்.
காரியாலயம் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, சில நிமிடங்களில் செல்லக்கூடிய கிராம சேவகர் காரியாலயத்துக்கு, வாகனங்களிலேயே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக, பிரதேச செயலக அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து. தற்போது பழைய இடத்திலேயே, கிராம சேவர் பிரிவை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
8 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago