2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

குப்பைகளால் களுகங்கைக்கு ஆபத்து

Gavitha   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், முறையாக கழிவு நீக்கம் செய்யப்படாதமையால், அவை களு கங்கையில் கலந்து, மக்களின் குடிநீருடன் கலப்பதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இரத்தினபுரி நகர, சுற்றுப் பிரதேசங்களிலிருந்து ஒதுக்கப்படும் சகல குப்பைகளும், சில பொதுமக்களால் முறையின்றி வீசப்படுவதாகவும் இடத்துக்கு இடம் அமைக்கப்பட்டுள்ள கொள்கலங்களில் குப்பைகள் சேரிக்கப்படாமையால்,  அவை களுகங்கையுடன் கலப்பதாகவும் இதனால், இந்த நீரைப் பருகும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .