2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

குப்பைகளை அகற்றாமையால் பொதுமக்களுக்கு அசௌகரியம்

Editorial   / 2018 ஜூன் 26 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமா மகேஸ்வரி

இரத்தினபுரி நகரில், முறையாகக் குப்பைகள் அகற்றப்படாமையால், நகரம் முழுவதும், பாரிய துர்நாற்றம் வீசி வருவதாகவும் இதனால், தாம் பாரிய சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில், கடந்த மாதம் நீடித்த மழையுடன்கூடிய வானிலையைத் தொடர்ந்து, வீதியில் கொட்டப்படும் குப்பைகள், மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு, நகரில் பரவலாகக் காணப்படுவதாகவும் இந்தக் குப்பைகள், முறையாக அகற்றப்படவில்லை என்றும், நகரவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால், இளையான் மற்றும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் நகரவாசிகளும் நகரத்துக்கு தினசரி வருகைதரும் மக்களும், பாரிய சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரத்தினபுரி நகரில், டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குப்பைகள் அகற்றப்பாடது தேங்கிக் கிடப்பதால், நுளம்புகளின் பெருக்கம் மேலும் அதிகரிக்கலாமென்றும் எனவே, இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனஞ்செலுத்த வேண்டுமென்றும், நகர மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், 1,105 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அமைச்சின் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X