2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

‘குறைகூறுதல், தூண்டிவிடுதலுக்கு இ.தொ.கா அஞ்சாது’

ஆ.ரமேஸ்   / 2019 ஜனவரி 30 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டொப்பந்த நடவடிக்கைக்கு எதிராக குறைகூறுதல், அதற்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு நடத்தப்படும் போராட்டங்கள் போன்றவற்றைக் கண்டு அஞ்சப்போவதில்லை என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எ.பி. சக்திவேல் தெரிவித்தார்.  

கூட்டொப்பந்தம் தொடர்பில், தொழிலாளர்களுக்கும் தோட்டக்கமிட்டிகளுக்கும் விளக்கமளிக்கும் கூட்டம், நேற்று (29), இ.தொ.கவின் காரியாலயத்தில் நடைபெற்றது.  

இதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

கடந்த மூன்று மாதங்களாக, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கவேண்டும் என்று ஒரு தரப்பினரும் நாங்களும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்ப டுத்துகிறோம் என்று வேறொரு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும், கடந்த 1992ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை, மலையக மக்களுக்கு பொறுப்புள்ள ஒரு வழிகாட்டியாக, இ.தொ.க இருந்து, சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுத்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.  

கூட்டொப்பந்தம் இல்லாமல் செய்யப்படல் வேண்டும் என்று என்று, பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள், இந்தக் கூட்டொப்பந்தத்தின் ஊடாகவே வழங்கப்படுவதாகவும் இதைப் பற்றித் தெரியாதவர்களே, ஒப்பந்தம் வேண்டாம் என்று கூறி வருவதாகவும் அவர் கூறினார்.  

அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளில் பாதிப்பு ஏற்படும் போது, ​தொழிற்சங்கங்களே அவற்றைக் கவனிப்பதாகவும் தேர்தல் காலங்களில், பேரம் பேசக்கூடிய சக்தி, சில அரசியல்வாதிக்கு கிடைத்தாலும் அதை அவர்கள் பயன்படுத்தி க்கொள்ளவில்லை என்றும் ஆனால், இ.தொ.கா மாத்திரமே, பேரம் பேசும் சக்தியா, படிப்படியாக மக்களின் உரிமைகளை வென்றெடுத்து வருவதாக அவர் மேலும் கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .