Freelancer / 2025 செப்டெம்பர் 12 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்டத்தில் விறகு சேகரிக்க சென்ற 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இவர் விறகு சேகரிக்க சென்ற வேளையில் சட்டி குளவி கொட்டுக்கு இலக்காகி மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இறந்தவரின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேதபரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். R
28 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
51 minute ago
1 hours ago