Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
R.Maheshwary / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்திற்கு தாதியர் பயிற்சி கல்லூரி ஒன்றையும் தொழில்பயிற்சி நிலையம் ஒன்றையும் பெற்றுத் தருமாறு, இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் ஜூலி சங்கிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்த கோரிக்கை தொடர்பாக பரீசீலிப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாக ம் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் (07) நுவரெலியா கிரேன் விருந்தகத்தில் நடைபெற்றது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக மலையக மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதித்துள்ளமை தொடர்பாக உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
மேலும் மலையக மாணவர்களின் கல்வி அவர்களுடைய வேலைவாய்ப்பு உயர் கல்வி சுயதொழில் வேலைவாய்ப்பு உட்பட இன்னும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக மிகவும் விரிவாக கலந்துரையாடினோம்.
நாம் முன்வைத்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் அமெரிக்க உயர் ஸ்தானிகர் விடயங்களை தெளிவாக கேட்டறிந்து கொண்டதுடன், அவர் எமகு கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து தன்னால் முடிந்த ஏற்பாடுகளையும் அபிவிருத்தியையும் செய்வதற்கான கோரிக்கையை அமரிக்க அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்கா மக்களின் நிதி பங்களிப்புடன் இலங்கையில் செயற்பட்டு வருகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களிடம் ஒத்துழைப்பு வழங்குமாறு தான் பணிப்பதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
37 minute ago
38 minute ago