2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கூட்டுறவு சங்க சேவையாளர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண கூட்டுறவு சங்க சேவையாளர்களுக்கான ஊதியத்தை, 20 சதவீதமாக உடனடியாக அதிகரிக்குமாறு, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண கூட்டுறவு திணைக்களத்துக்கு உத்தரவிட்டார். 

சப்ரகமுவ மாகாண கூட்டுறவுச் சங்க அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று, நேற்று (13) சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு உத்தரவிட்டார். 

இதன்போது, இங்கு கருத்துத் தெரிவித்த மாகாண முதலமைச்சர் கூறியதாவது, 

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள 2,350 கூட்டுறவு சங்க சேவையாளர்களுக்கும் இம்மாதம் முதல் 20 சதவீதம் ஊதியம் அதிகரிக்கப்பட உள்ளது. இதன் அடிப்படையில், சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள கூட்டுறவு சங்க சேவையாளர் ஒருவருக்கு 5,000 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது” என்றார். 

இதேவேளை, சப்ரகமுவ மாகாண கூட்டுறவுச் சங்க சேவையாளர்களுக்கு, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் ஆலோசனைக்கு அமைய, ஓய்வூதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதி என்பன வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .