2025 ஜூலை 31, வியாழக்கிழமை

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் பலி

Janu   / 2025 ஜூலை 28 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை பலாபத்வலை பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில்  இரு தரப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.   

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சதுரங்க ரத்நாயக்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 குறித்த இளைஞன், மேலும் மூவருடன் ஞாயிற்றுக்கிழமை (27) இரவு சந்தேக நபரின் வீட்டிற்கு வந்து சந்தேக நபரிடம் மற்றும் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாக்குவாதம் முற்றி , சந்தேக நபர் அருகில் இருந்த கூர்மையான ஆயுதத்தால்  இளைஞனின் கழுத்தில் குத்தியுள்ளதாகவும் இதில் மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .