2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

கைதுசெய்யப்பட்ட நால்வர் பிணையில் விடுதலை

R.Maheshwary   / 2022 மே 15 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நாவலப்பிட்டி நகர மத்தியிலுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் நால்வர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் 25- 50 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், இவர்கள் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பொலிஸாரால் நேற்று (14) கைதுதசெய்யப்பட்ட  நால்வரும்   நாவலப்பிட்டி நீதவான் நிலந்த விமலவீர முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவர்களை தலா ஓர் இலட்சம் சரீர்ரப் பிணையில் விடுதலை செய்யுமாறும் இந்த வழக்கை அடுத்த மாதம் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாதம் 9ஆம் திகதி நாவலப்பிட்டி நகரில்  முன்னெடுக்கப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகேயின் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி, சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக தெரிவித்து, மஹிந்தானந்தவின் பிரத்தியேக செயலாளரால் 16 பேருக்கு எதிராக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதற்கமைய, குறித்த நால்வரும்   கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X