2026 ஜனவரி 21, புதன்கிழமை

கைப்பையை திருடிய இளைஞனைத் தேடி பொலிஸார் வலைவீச்சு

Niroshini   / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

ஆடைகள் கொள்வனவு செய்வதற்காக வருகைதந்து, கடை உரிமையாளரின் கைப்பையை இளைஞர் ஒருவர், திருடிச் சென்ற சம்பவம் ஒன்று, கொட்டகலை நகரில் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலை நகரிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றுக்கு வருகைதந்த இளைஞன் ஒருவர், கடை உரிமையாளரின் பையை (பேர்ஸ்) திருடிச் சென்றுள்ளார்.

அதில் 20,000 ரூபாய் பணமும் சில முக்கியமான ஆவணங்களும் இருந்ததாக, உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில், திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதை தொடர்ந்து, கடையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி கமெரா காணொளி உதவியுடன், குறித்த இளைஞனை கைதுசெய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X