Editorial / 2025 ஜனவரி 06 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை தங்களுக்கு ஏற்பட்டுள்ளமை காரணமாக, அதற்கான உரிய தீர்வை வழங்குமாறு கோரி கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் ஜனாதிபதிக்கும் வர்த்தக அமைச்சருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிடின், அரிசி விற்பனையில் இருந்து விலகி இருப்பதற்கு கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கொட்டகலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அந்த சங்கத்தின் தலைவர் புஷ்பா விஸ்வநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு கொட்டகலையில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் சிவப்பு அரிசிகான அதிகப்பட்ச சில்லறை விலையாக ஒரு கிலோ கிராமுக்கு 220 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும் தங்களுக்கு சிவப்பரிசி மற்றும் வெள்ளை அரிசி ஒரு கிலோகிராம் 295 ரூபாய் என்ற மொத்த விலையில் புறக்கோட்டை சந்தையில் கிடைக்கப்பெறுகிறது.
இவ்வாறான பின்னணியில், தங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாது என கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் அரிசி 235 ரூபாவுக்கு மொத்த விலையில் கொள்வனவு செய்யப்படுவதுடன், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுடன் ஒப்பிடும் போது உரிய விலையில் விற்பனை செய்ய முடியாது என கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் புஷ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
11 minute ago
08 Nov 2025
08 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
08 Nov 2025
08 Nov 2025