Kogilavani / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன் - தலவாக்கலை பிரதான வீதி, கொட்டகலை சுரங்கப்பாதையில் இரு பஸ்கள் ஒன்றின் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன என்று, திம்புள்ளை-பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று (18) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸும் அதன் பின்னால் வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸூமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தில் பயணிகளுக்கு எவ்விதப் பாதிப்புகளும் இல்லை என்றும் தனியார் பஸ் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

13 minute ago
43 minute ago
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
43 minute ago
21 Jan 2026